ஐதராபாத்தில் மேலும் 5 ஐ.எஸ். தீவிரவாதி ஆதரவாளர்கள் உள்ளனர்: கைதானவர்கள் தகவல்
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் போலீசார் இணைந்து கர்நாடகம், ஐதராபாத், உத்தரபிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் 13 ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் ஜனூட்–உல்– காலிதே – இ ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கி இருந்தார்கள். இது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கருத்தை ஒத்து இருந்தது தெரிய வந்தது. கைதான அனைவரும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். கைதானவர்களில் முகமது நபீஸ்கான், மொய்து னூதீன், முகமது உபய துல்லாகான், அபுசான் ஆகிய 4 பேர் ஐதராபாத்தில் பிடிபட்டவர்கள்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆந்திரா, தெலுங்கானாவில் மேலும் 5 ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் இருப்பது தெரிய வந்தது. இதுதவிர மேலும் 2 பேர் சிரியா சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். அவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் பெரிய சதி திட்டத்துக்கு தயாராக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் செய்பாடுகளை போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளனர். அதோடு ஐதராபாத்தில் கூடுதல் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply