ஆதரவாளர்களை கைது செய்தால் தாக்குதல் நடத்துவோம்: மலேசியாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், படிப்படியாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளன.அந்தவகையில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வரும் மலேசியாவில் சமீபத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்த அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் மலேசியாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், ‘நீங்கள் எங்களை பிடித்தால், நாம் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் அதிகரிப்போம். ஆனால் நீங்களும் எங்களைப்போல மாறினால் நம்மால் வெகு விரைவில் கலிபாவின் அரசை திரும்ப கொண்டு வரமுடியும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் சின்னத்துடன் அந்த வீடியோவில் பேசிய தீவிரவாதிகள், தங்கள் ஆதரவாளர்களை கைது செய்தால் தாக்குதல் நடத்துவோம் என மிரட்டலும் விடுத்திருந்தனர்.
இந்த விவகாரம் மலேசிய அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இது முக்கியமான அச்சுறுத்தல் என கூறியுள்ள பிரதமர் நஜிப் ரசாக், இதை தனது அரசு தீவிரமாக எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply