தமிழர்களின் ஒரு தலைமுறையை சிங்கள அரசு அழித்துவிட்டது

kanisiyas 2கொக்கட்டிச்சோலை படுகொலையில் தமிழர்களின் ஒரு தலைமுறையை சிங்கள அரசு அழித்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொக்கட்டிச்சோலை காலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஈழ விடுதலை என்னும் போராட்டத்தில் 3 இட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இந்த மண்ணில் பலி கொடுத்ததாக குறிப்பிட்ட அவர், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை இழந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொக்கட்டிச்சோலை படுகொலை போன்று வாகரை, வெருகல், மற்றும், முள்ளிவாய்க்காலில் 14 ஆயிரம் தமிழர்கள், குருநகர் கடல், நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்திலிருந்த பாடசாலைச் சிறார்கள், நாகர் கோயில், போன்ற இடங்களிலிருந்த தமிழர்களை சிங்கள அரசு கொத்துக் கொத்தாய் கொன்று குவித்ததை நினைவுபடுத்தினார்.

உலகத்திலே விடுதலைக்காகப் போராடி தன்னுடைய இன அளவிற்கு மேலாக இழப்பைச் சந்தித்த இனம் தமிழ் இனம் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், யுத்த காலத்தில் இராணுவத்திடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே என தெரியவில்லை என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழு வட, கிழக்கு மக்களிடம் சென்று ஆடு, மாடு மற்றும் காணமல் போனவர்களுக்கு மரணச்சான்று தரப்படும் என கூறியதாக சுட்டிக்காட்டிய இவர், சர்வதேச நீதிபதிகளின் வருகையை தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சனல் 4 ஊடகத்திற்கு குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை, நாகர்கோயில், மகிழடித்தீவு, குருநகர், நவாலி தேவாலயம், நாகர்கோயில், போன்ற இடங்களில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அவர்களுக்கு எவரும் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply