போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகளின் தகவல்கள் கசிந்தது!
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இருந்து இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்களை யஸ்மின் சூக்கா பெற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த தகவல்களை இலங்கையில் அமைக்கப்படவுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான விசேட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பாதுகாப்புத் தரப்பினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தாருஸ்மான் குழுவிலும் இடம்பிடித்திருந்த சூக்காவின் கையில் ஐ.நா. ஆணைக்குழு குறித்த விபரங்களைக் கையளித்துள்ளமையானது சட்டவிரோதம் என்றும் சிங்கள ஊடகமொன்றின் செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply