ஆரையம்பதியில் திட்டமிட்ட நில அபகரிப்பு !

arayampathiஆரையம்பதி ஸ்ரீ நரசிங்கர் ஆலய கடற்கரை சூழலை அண்டிய பிரதேசத்தினுள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு வந்த தாளை மரங்களை வெட்டி அகற்றிவிட்டு அக் காணிகள் சுவிகரிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

காத்தான்குடி ஆரையம்பதி எல்லைகளையும் தாண்டி  தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்துக்குள் அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி அத்துமீறி காணிகளை பிடித்து வருவதாக பிரதேச வாழ் மக்கள் தெரிவித்தனர்.

அவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா,ஸ்ரீநேசன் அவர்களும், கிழக்கு மாகாண சபையின் உப தவிசாளர் பிரசன்னா  இந்திரகுமார் அவர்களும் குறித்த இடத்தை சென்று பார்வையிட்டனர்.

ஆரையம்பதி  நிலப்பரப்பில் வாழ்ந்தது வருகின்ற  தமிழ் மக்களின் நிலங்கள் திட்டமிட்ட அபகரிக்கப்படுவதோடு, கடந்த காலத்தில் தமிழர்களின் அரசியல் பலக்குறைவைப் பயன்படுத்தி திட்டமிட்ட  நில நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எடுத்தபோது உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பொறுப்பு மிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் அவர்கள் பாராமுகமாக இருப்பதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.​

arayampathi

arayampathi01

மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply