திருப்பி அடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் -மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை
பொறுமை காத்துக் கொண்டிருக்கும் தங்களை தொடர்ந்து தாக்கிக் கொண்டு வந்தால் திருப்பி அடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக எங்களை தள்ளிக் கொண்டே இருந்தால் நாம் என்ன செய்ய முடியும் என்று தெரிவித்த மகிந்த சுவருடன் மோதினால் திரும்ப நேரிடும் என்றும் அதனால் திருப்பி அடிக்க வேண்டி ஏற்படும் எனவும் மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்னமும் சுவரில் தள்ளவில்லை என்றும் அதற்கு இன்னமும் காலம் இருப்பதாக தான் கருதுவதாகவும் குறிப்பிட்ட ராஜபக்ச இவைகளை எல்லாம் ஊடகங்களில் போடவேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
தான் உறவினர்களுடனேயே இதனைப் பேசிக்கொண்டிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். யோசிதவுக்காக நான் கண்ணீர் சிந்தும் புகைப்படங்களை ஊடகங்கள் மகிழச்சியோடும் வெளியிட்டுள்ளன என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply