அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.எஸ் தீவிரவாதிகள் பற்றி விசாரணை செய்யட்டும்-பொதுபல சேனா
தைரியம் இருந்தால் அரசாங்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் விசாரணை நடத்துங்கள் என, பொது பல சேனா அமைப்ப அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-
‘விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றியும் ஏனைய தீவிரவாத அமைப்புகள் பற்றியும் தேடியதை விட, இந்த அரசாங்கம் ஞானசார தேரர் பற்றி ஆராய்ந்து வருகின்றது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தொடர்பில் பொலிஸாரும், பிரதமரும் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், ஞானசார தேரர் நீதிமன்றை அவமரியாதை செய்தாரா என்பதனை நீதிமன்றம் தீர்மானிக்கும்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் பௌத்த பிக்குகளை துரத்தாமல், ஐ.எஸ் தீவிரவாதிகள் பற்றி விசாரணை செய்யட்டும்.
ஞானசார தேரர் தனக்காக அன்றி, இனம், மதம், மொழி மற்றும் படைவீரர்கள் பற்றியே குரல்கொடுத்து வந்தார். அவர் மக்கள் முன் எடுத்துச் செல்ல முயற்சித்த எண்ணக்கருவினை நாம் அமைதியான முறையில் எடுத்துச் செல்ல வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார் .
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply