ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு இலங்கையில் உள்ள முருகனின் தாயார் தீவிர முயற்சி: மோடியை சந்திக்க திட்டம்

muruganராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்யக்கோரி, முருகனின் தாயார் 10 லட்சம் கையெழுத்துகளை திரட்டி பிரதமர் மோடியிடம் மனு சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991–ம் ஆண்டு மே 21–ம் தேதி ஸ்ரீ பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், அவருடைய மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் 7 பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இருப்பினும், அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

இந்நிலையில், முருகனையும், மற்ற 6 கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி, இலங்கையில் முருகனின் தாயார் சோமினி, கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார். விடுதலைப்புலிகளின் நிர்வாக தலைநகராக விளங்கிய கிளிநொச்சியில் சோமினி வசித்து வருகிறார். கையெழுத்து பிரசாரம் பற்றி சோமினி கூறியதாவது:–

என் மகன் உள்பட 7 பேர், 25 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளனர். கொடிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உலக தலைவர்கள் மன்னித்ததற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உள்ளன. அதுபோல், என் மகனுக்கும் கருணை காட்டப்படும் என்று நம்புகிறேன். அதற்காக, என் மகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி, இலங்கையில் கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். 10 லட்சம் கையெழுத்துகளை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளேன். இந்த கையெழுத்துகளுடன் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply