வவுனியாவில் இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்த காணாமல் போனவர்களின் உறவுகள்.
இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கரிநாளாக அணிஷ்டித்து வருகின்றனர் அனைத்து மாவட்டங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி உறவினர்கள் போராடிவருகின்ற நிலையில் வவுனியாவில் நகர சபைக்கு முப்பாக அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவிடத்தில் வவுனியாவில் உள்ள உறவுகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தை பார்வையிட சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் . தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு கொண்டாடிவருகின்ற நிலையில் தமிழ் மக்கள் இந்த சுதந்திர தின நிகழ்வை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை என்பது அவர்களது இயல்பு வாழ்கையில் இருந்து அவதானிக்க முடிகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply