மட்டக்களப்பில் 68வது சுதந்திரதினத்தை எதிர்த்து காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம் .
லங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்கா முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10.00மணியளவில் காந்தி சேவா சங்கத்தின் தலைவரும், தாயக மக்கள் மறுமலர்ச்சி மீட்பு பேரவையின் தலைவருமான லயன் ஏ. செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் காணாமற் போனவர்களின் மனைவிமார்,தாய்மார்,பிள்ளைகள், கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இதன்போது “அரசே எனது பிள்ளைகளை திருப்பித்தா” , “தமிழருக்கு ஒரு நியாயமா?மற்றவர்களுக்கு வேறு நியாயமா? நீதி வேண்டும் நீதி வேண்டும் ” “எனது பிள்ளை எனக்குவேண்டும்” ,”உறவுகளை உடனே மீட்டுத்தா” , “இன்னும் எங்களுக்கு ஏமாற்றம் வேண்டாம் ” ,”நால்லாட்சி அரசாங்கம் ஏன் மௌனம் காத்து நிற்கின்றது” ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய எங்களுக்கு நீதி வேண்டும்” தமிழ் மக்களை ஜனாதிபதி இரண்டு கண்களையும் திறந்து பார்க்க வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்ணீர் சிந்தி கதறியழுதனர். நல்லாட்சி அரசாங்கம் காணாமல் போனவர்கள் விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
எங்கள் பிள்ளைகள் இறந்துவிட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திலோ,வக்கிலோ சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது.இந்தவிடயமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கருத்து தெரிவிக்கையில் இன்று நல்லாட்சிஅரசாங்கம் என்று சொல்லிக்கொண்டிக்கும் காணாமற் போனவர்களின் நிலைப்பாட்டில் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர்கள் உடனடியாக கவனம்செலுத்தி காணாமற் போனவர்களை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். அல்லது அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்.
இன்று அவர்கள் காலிமுகத்திடலில் சுதந்திரமாக சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்மக்கள் கண்ணீரையும், கம்பலையும் வாழ்நாள் பூராகவும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.உண்மையாக இவர்களுக்கு தமிழர்கள் மீது நம்பிக்கை, விசுவாசம்,இருந்தால் காணாமற் போனவர்களின் விடயத்தில் தீர்வு கொடுத்திருக்க வேண்டும். தயவு செய்து வடகிழக்கில் காணாமற் போனவர்களின் குடும்பத்திற்கு பதில் சொல்லியாகவேண்டும்.தமிழ்மக்களை சுட்டு குவித்து வெற்றி விழா கொண்டாடிய மஹிந்த ராஜபக்ஸ கண்ணீர் வடிக்கின்றார்.இது நாங்கள் வழிபடும் இறைவனின் இறைதீர்ப்பு ஆகும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் இருந்து 2200பேர் கூலிப்படைகளினாலும்,கடந்தஆட்சியாளர்களினாளும் காணாமற் போகச்செய்யப்பட்டது.இவர்கள் கடத்தப்பட்டார்களா?, காணாமற் செய்யப்பட்டார்களா? என சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.காணாமற் போன ஆணைக்குழு நல்லாட்சி அரசாங்கத்தில் காணாமற் போன குடும்பத்திற்கு என்ன செய்திருக்கின்றது.
அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை வழங்கியிருக்கின்றதா.இல்லை என்று தான் அனுமானம் செய்யமுடியும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமற்போனவர்ககளின் குடும்பத்தார்கள் ஒன்று சேர்ந்து சுமார் 2200 விண்ணப்பங்களை காணாமற்போன ஆணைக்குழுவிற்கு விசாரணை செய்வதற்கு விண்ணப்பித்திருந்தது.இதில் 425 விண்ணப்பங்களை விசாரணை செய்தது. 1575விண்ணப்பங்கள் விசாரணை செய்யப்படவில்லை.விசாரணை செய்வதற்கு விண்ணப்பிருந்தவர்களின் விண்ணப்பங்கள் எங்கே? விசாரணை விண்ணப்பங்கள் வாக்குச்சீட்டுப்போல் குப்பைக்குள் வீசப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர்களுக்கு மிகவிரைவில் காணாமற் போனவர் விடயத்தில் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர்கள் நீதியான பொறுப்பு ,தீர்வுகள் வழங்க வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெருவித்தனர் .
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply