அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டிரம்ப் பயணம் செய்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருப்பவர் டொனால்டு டிரம்ப். இவர் நியூயார்க் நகரில் இருந்து ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் நகருக்கு போயிங்-757 ரக விமானத்தில் நேற்று பயணம் செய்தார். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமானி அவசரமாக டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லே விமான நிலையத்தை தொடர்பு கொண்டு, அனுமதி பெற்று, அங்கு அந்த விமானத்தை அவசரமாக தரை இறக்கினார்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து வேறு ஒரு சிறு விமானம் மூலம் டிரம்ப், லிட்டில் ராக் நகருக்கு புறப்பட்டு சென்றார்.
அவர் பயணம் செய்த விமானத்தில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply