ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய எடுத்த முடிவு தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்:அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்

தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்துள்ளார்.அமைச்சரின் மட்டக்களப்பு காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, தாம் எதிர்நோக்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் தொழில் ரீதியான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்கள் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு அமைச்சரைக் கேட்டுக்கொண்டனர். பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாக கிழக்கு பிராந்திய பொலிஸ் மா அதிபருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்படுத்தி அதில் ஆராய்ந்து தீர்வு காணப்படும் என்றும் தொழில்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஊடக அமைச்சர்களுடனான சந்திப்பு ஒன்றை கொழும்பில் ஏற்பாடு செய்து தருவதாகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உறுதியளித்தார்.

மேலும், தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய எடுத்த முடிவு தொடர்பாகவும் செய்தியாளர்களுக்கு அவர் விளக்கமளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply