முகநூல் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அச்சுறுத்தல்விடுக்கப் பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்
முகநூல் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சில பெண்கள் உள்ளிட்டவர்கள் முகநூல் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் ஊடாக அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கைதானதன் பின்னர் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply