ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகளும் வெளியேற்றப்பட வேண்டும் -மாவை சேனாதிராஜா
தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழரசுக்கட்சி செயற்படுவதானால் தற்போது பேரவையில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகளும் வெளியேற்றப்பட வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளார் மாவை சேனாதிராஜா அவர்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் பங்காளிக் கட்சிகளில் ஒன்று என்பதை மாவை ஐயா எப்படி மறந்தார் ..? மொத்தத்தில் மாவை ஐயா அவர்களுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் பிரச்சனை இல்லை சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் மட்டுமே பிரச்சனை.
அன்று ஒருவரை கூட்டமைப்பில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள். மற்றவரை பாராளுமன்ற ஆசனத்திற்கு வெளியே நேற்று தள்ளி விட்டார்கள். இன்று இவர்கள் இருவரையும் சேர்த்து பேரவைக்கு வெளியே கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் தமிழ் தேசியவாதிகளை பிடிக்காது ஆனால் வாக்குகள் அள்ளுவதற்காக கூட்டமைப்பில் உள்ள ‘தமிழ் தேசியம்’ மட்டும் இவர்களுக்கு நன்கு பிடித்திருக்கின்றது என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பிரமுகர் ஒருவர் விசனம் தெருவித்துள்ளார் .
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply