மலையக மக்கள் வடக்கு, கிழக்கு மக்களைப் போன்று சமஷ்டி அதிகாரத்தையோ அல்லது முஸ்லிம்களைப் போன்று தனி அலகையோ கோரவில்லை.- வி.இராதாகிஷ்ணன்

RATHAபுதியஅரசியலமைப்புத்திருத்தம் மூலமாக மலையக மக்கள் தமது அடையாளங்களையும் அந்தஸ்தினையும் உறுதிப்படுத்துமாறு கோருகிறார்களே தவிர வடக்கு, கிழக்கு மக்களைப் போன்று சமஷ்டி அதிகாரத்தையோ அல்லது முஸ்லிம்களைப் போன்று தனி அலகையோ கோரவில்லை.என கல்வி இயங்க அமைச்சர் வி.இராதாகிஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கிரான் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான தொழிநுட்பபீட கட்டடம் மற்றும் ஆய்வு கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுதந்திரமாகப் பேச முடியாத நிலை காணப்பட்டது. போர் முடிவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இறுதி 5 வருடங்கள் இந்நாட்டு மக்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை என இராஜங்க கல்வி அமைச்சர் வேலுச்சாமி இராதாக்கிருஸ்ணன் தெரிவித்தார்.

 

 

 

தற்போது நாட்டில் முழுமையான அரசியல் யாப்பு திருத்தம் மேற்கொள்ள முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. யாப்பு மாற்றத்துக்கு இந்த நாட்டு மக்களின் கருத்துக்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த வகையில் ஒவ்வொரு பிரதேச மக்களும் அரசியல் யாப்புத் திருத்தத்திற்கான அபிப்பிராயங்களை முன்வைக்க முடியும் என்றார்.
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply