இரண்டு பாடசாலைகளுக்கு பாண்ட் வாத்தியக்கருவிகளை அமைச்சர் டெனிஸ்வரன் வழங்கிவைத்தார்.

denish001மடு வலைய கல்விப்பணிமனைக்கு உட்பட்ட தேவன் பிட்டி மகா வித்தியாலயம் மற்றும் குஞ்சுக்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் கடந்த ஆண்டு
விளையாட்டு விழாவின் போது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் வாக்குறுதி வழங்கப்பட்டு, அந்த வாக்குறுதிக்கு அமைவாக தனது பிரமாண அடிப்படையிலானமூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 175,000-00 ரூபா பெறுமதியில் இரண்டு பாண்ட் வாத்திய தொகுதிகளை, 05-02-2016 வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விஜயம் செய்து வழங்கிவைத்தார்.

இவ் நிகழ்வுகளின் போது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், அமைச்சின் செயலாளர் திரு எஸ்.சத்தியசீலன் அவர்களும், மடு பிரதேச செயலாளர் திரு.எப்.சி.சத்தியசோதி அவர்களும் மடு வலைய கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply