வட மாகாணத்தின் புதிய ஆளுனராகின்றாரா ரெஜினோல்ட் குரே?
வட மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.வட மாகாண ஆளுனராக கடமையாற்றி வரும் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார பதவியை விட்டு விலகத் தீர்மானித்துள்ளார்.அரசாங்கத்திடம் ஏற்கனவே இணங்கிய காலத்தை விடவும் அதிக காலம் பதவி வகித்துள்ளதாக பலிஹக்கார தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக பலிஹக்கார தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு சிரேஸ்ட அரசியல்வாதி ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட உள்ளார் என அறியக் கிடைத்துள்ளது .
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply