போரை முடிவுக்குக் கொண்டு வந்தது என்னுடைய மிகப் பெரிய தவறாகும். – மஹிந்த ராஜபக்ச
குருணாகல் உஹூமியா ரத்மலே விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்…
இன்று என்னை விமர்சனம் செய்யும் நபர்கள் எனது அமைச்சரவையில் நான் சொன்ன அனைத்தையும் யெஸ் எனக் கூறி கரம் உயர்த்தியவர்களாவர்.
தோல்வியடையப் போகும் போரில் யாரும் இணைந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.அவ்வாறான பின்னணியில் படையில் இணைந்து கொள்ள அனுமதிக்குமாறு யோசித ராஜபக்ச என்னிடம் அனுமதி கோரியிருந்தார்.அனுமதி கோரிய காரணத்தினால் நான் அனுமதி வழங்கியிருந்தேன்.
நான் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்காவிட்டால் இன்று யோசித சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்க மாட்டார்.
நான் உள்ளிட்ட எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்..
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply