யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களை தண்டிக்க வேண்டும் ; அசாத் சாலி
யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி வலியுறுத்தியுள்ளார் . கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதில்லை எனவும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 30 வருட கால யுத்த்த்தில் தவறு செய்தவர்கள் தமது தவறை உணர்ந்து கொள்ளும் வகையில் தண்டனை வழங்க வேண்டும் என அசாத் சாலி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனவும் கடந்த அரசாங்கத்தை போன்று முஸ்லிம் மக்களை புறக்கணிக்காது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply