பாதுகாப்பு ஊழியர்களின் பெயரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொத்துக்கள்?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு ஊழியர்களின் பெயரில் சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கையை பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு ஆரம்பித்துள்ளது. இதன்படி இலங்கை வங்கி உள்ளிட்ட 79 வங்கிகளில் மற்றும் நிதி நிறுவனங்களில் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஊழியர்களாக பணிபுரிந்த மூவரது வங்கிக் கணக்கு குறித்து ஆராயுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இவ்வாறு பணித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய வன்னியாரச்சி நெவில், திஸ்ஸ விமலசேன மற்றும் தமித் கோமிஸ் ரணசிங்க முதலிய பாதுகாப்பு ஊழியர்களது வங்கி விபரங்களே சோதனையிடப்படவுள்ளன.
ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலகம் இரகசிய பொலிஸாரிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, பொலிஸ் நிதி மோசடி பிரிவினால் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த விசாரணைகளின்போது குறித்த மூவர் மற்றும் அவர்களது உறவினர்களின் பெயர்களில் நிதி நிறுவனங்களில் காணப்படும் சொத்து மதிப்பு தொடர்பான விபரம் அவசியம் என பொலிஸார் தெரிவித்தமைக்கு அமையவே, குறித்த உத்தரவை நீதவான் வழங்கியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஊழியர்கள் மூவரது பெயர்களில் காணப்படும் வங்கி நிதி நிலைமை குறித்தான அறிக்கையை வழங்குமாறு, 32 வங்கிகள் மற்றும் 47 நிதி நிறுவனங்களுக்குகொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply