தேசிய மற்றும் மாகாண அரசுகளை எதிர்பார்த்து ஏமாற்றப்பட்ட தமிழ் மக்களை ஐக்கிய நாடுகள் சபையும் ஏமாற்றிவிடக்கூடாது..
“பாவி போகின்ற இடம் பள்ளமும் பிட்டியும்” என்பது போல இந்த உலகத்தில் பாவப்பட்ட ஒரு இனமாக உள்ள தமிழினம் எங்கெல்லாம் போகின்றதோ யாரையெல்லாம் நம்புகின்றதோ அவைகளாலும், அவர்களாலும் ஏமாற்றப்பட்டே வருகின்றனர் . நீண்ட நெடிய ஆயுதப் போராட்டத்தின் பின்னர் தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட அநீதிகளுக்கான நீதியையும் நிவாரணத்தையும் பெறும் அதே நேரம் இந்த அழிவுகளுக்கான அடிப்படை காரணமானஇனப்பிரச்சனைக்கு தீர்வையும் எப்படியாவது பெற்று அடுத்த சந்ததியாவது நின்மதியாக வாழ வழிசமைப்போம் எனும் நோக்கத்தோடு இடம்பெறுகின்ற தேர்தல்களில் எல்லாம் தமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கோடு சலுகைகள் தேவைகளுக்கு அப்பாற்பட்டு உணர்வுரீதியாக வாக்களித்து தாம் விரும்பிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கொண்டுவர பெரும் பங்களிப்பை வழங்கியும் தமிழில் தேசிய கீதம் பாடியதை தவிர கண்ட பயன் எதுவுமில்லை மத்திய அரசின் மூலமாக தமிழ் மக்களுடைய அடிப்படைஅபிலாசைகளை கூட தீர்க்க முடியவில்லை. புதிய அரசும் சர்வதேசத்தை மகிழ்விப்பதற்கான கவர்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவே தவிர உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளான காணாமல்போனோரை மீட்டல், அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் போன்றவற்றில் கூட எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை வெறும் கண் துடைப்பிற்காகவும், விளம்பரங்களுக்காகவும் வலிவடக்கில் சில காணிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளன வழமையாக வருகின்ற பெரும்பான்மை அரசுகளின் போக்கில் புதிய அரசும் செயற்படுவதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வடமாகான சபையினை கைப்பற்றி அதன்மூலம் பாரிய நகர்வுகளை முன்னேடுக்கப்போகின்றோம் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று வரலாறுகாணாத வெற்றிபெற்று தமிழ் மக்களின் பெரும் எதிபார்ப்புடன் ஆட்சியைப்பிடித்த வடமாகாண சபையும் வினைத்திறன் அற்றதாக செயற்படுவத்துடன் தமக்குள்ளே மோதிக்கொண்டும் புறக்காரணிகளை குறை கூறியும் காலத்தைக் கழித்துவரும் நிலையில் வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் வைத்திருந்த இமாலய நம்பிக்கையும் தவிடு பொடியாகியுள்ள நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதுத்துவப்படுத்தும் தலைவர்கள் அடுத்த தேர்தல் பற்றி சிந்திக்கும் சாதாரண அரசியல் வாதிகளாக நடந்து கொள்கிறார்களே தவிர அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் தலைவர்களாக செயற்பட தவறிவிட்டார்கள் என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தநிலையில்தான் தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையமும் அதன் நடவடிக்கைகளில் இருந்து சற்று பின்வாங்குவது போன்ற தோற்றம் அண்மையயில் இலங்கைக்கு வருகை தந்த மனித உரிமை ஆணையாளரின் சில கருத்துக்களில் இருந்து வெளிப்படுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். அவர் இலங்கையில் வடக்கு முதலமைச்சரை சந்தித்த போது “அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வது சாத்தியமில்லை” எனக்கூறியதும் கொழும்பில் வைத்து “போர்க்குற்றவாளிகளை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த விரும்பவில்லை” என குறிப்பிட்டதும் ஜனாதிபதியை சந்தித்த போது “இலங்கையின் நீதித்துறையில் தான் நம்பிக்கை வைத்துள்ளதாக” கூறியதும் அவரது நழுவல் போக்கினை காட்டுகின்றது ஆணையாளரின் வருகை சில வகைகளில் ஆறுதல் அளித்தாலும் கூட முக்கிய விடயங்களில் அவரது கருத்து தமிழ் மக்களுக்கு இருந்த கடைசி நம்ம்பிக்கையையும் சிதறடித்து விட்டது.
இவ்வாறாக மக்கள் தொடர்சியாக மத்திய ,மாகாண அரசுகளினாலும் சர்வதேசத்தினாலும் ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் சரியான பாதையினை காண்பித்து ஒரு தீர்வை நோக்கி இடுச்செல்ல தவறும் பட்சத்தில் காலப்போக்கில் தமிழ் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக மாறுவதற்கான சந்தர்ப்பங்களை தோற்றிவிக்க இடமளிக்கலாம்.
நன்றி
ப.உதயராசா
செயலாளர் நாயகம்
ஸ்ரீ ரெலோ
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply