காஷ்மீர் பிரச்சினை தீரும் வரை இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடரும்: முஷரப் ஆணவம்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் இந்திய டி.வி.சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, ‘‘முக்கியமாக கருதப்படும் காஷ்மீர் பிரச்சினை தீரும் வரை இந்தியா மீதான தீவிரவாதிகள் தாக்குதல் தொடரும்.பொதுமக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாத பயிற்சி அளிக்கவில்லை. எங்களின் உளவு அமைப்பான ‘ஐ.எஸ்.ஐ.’ நிறுவனம் ஜெய்ஷ் – இ – முகமது – லஸ்கர் – இ – தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்து அனுப்புகிறது’’ என்றார்.மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அமைதி நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், காஷ்மீர் பிரச்சினை நீங்கள் (இந்தியா) கிளம்பினால் அனைத்தும் நிறுத்தப்படும். துரதிர்ஷ்டவசமாக தீவிரவாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்.பாகிஸ்தானில் காஷ்மீர் பிரச்சினை உணர்வு பூர்வமாக உள்ளது. அப்பிரச்சினையில் நாங்கள் கைவிடுவதாக இல்லை. அந்த பிரச்சினையை நீங்கள் (இந்தியா) விரும்பவில்லை.எங்களை அழிக்க பார்க்கிறீர்கள், முட்டாளாக்க நினைக்கிறீர்கள். எங்களை ஆட்டிப்படைக்க விரும்புகிறீர்கள். தீவிரவாதம், மும்பை, பதன்கோட் போன்ற பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறீர்கள்.மும்பை தாக்குதல் குறித்து டேவிட் ஹெட்லி கொடுத்த வாக்குமூலம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தை நான் நம்ப மாட்டேன்.
அவரிடம் பாகிஸ்தான் உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றார். முஷ்ரப் மீது 2 தடவை தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் – இ – முகமது தலைவர் மசூத் அசார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு, ‘‘என் மீது அவர் தாக்குதல் நடத்தினார். எனவே, அவர் ஒரு தீவிரவாதிதான். அதே நேரத்தில் லஷ்கர் – இ – தொய்பா தலைவர் ஹபீஷ் சயீத் பாகிஸ்தானில் எந்த தீவிரவாத செயலிலும் ஈடுபடவில்லை.ஒவ்வொரு முறையும் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா விலகி செல்கிறது. தீவிரவாதம் பற்றி மட்டுமே பேசுகிறது. உங்கள் நாட்டில் (இந்தியாவில்) பாகிஸ்தானுக்கு எதிரான எரிச்சலையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர்.நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த நினைக்கும் போதெல்லாம் இந்தியா எங்களை அச்சுறுத்தி பாக்கிறது. இந்திய உளவுத்துறையான ‘ரா’ ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துகிறது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply