சிரியாவில் ரஷ்யா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பலி: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக துருக்கி தகவல்

siriyaசிரியாவில் அரசு ஆதரவு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது அரசு படைகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் பின்னர் ரஷ்யாவும் இணைந்து கொண்டு தொடர்ந்து வான்வெளி தாக்குதலை நடத்தியது. 

 

இந்நிலையில், நேற்று ரஷ்யா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 16 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிரியாவில் நடைபெற்று வரும் போரினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வல்லரசு நாடுகள் ஒப்புதல் அளித்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லட் காவுசோக்லு கூறினார்.

 

மேலும், “நேற்று இரவு நாங்கள் ஒப்பந்தம் போட்ட பிறகும், ரஷ்யா தன்னுடைய தாக்குதலை தொடர்ந்துள்ளது. 16 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply