பருவநிலை மாற்றம் எதிரொலி: லண்டனில் இருந்து நியூயார்க் செல்லும் விமானப் பயண நேரம் அதிகரிக்கும்

britisவிண்வெளியின் ஓசோன் மண்டலத்தில் விரிவடைந்து கொண்டேவரும் ஓட்டை மற்றும் சுற்றுச்சூழல் மாசின் காரணமாக உலகின் தட்பவெப்ப நிலையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், கோடைக்காலமும், மழைக்காலமும் குளிர்க்காலமும் உச்சக்கட்டமான தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

‘எல்நினோ’ என அழைக்கப்படும் இந்த மாற்றம் எதிர்காலத்தில் மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில் வானில் உள்ள வளிமண்டலத்திலும் இந்த பருவநிலை மாற்றம் மிகப்பெரிய பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தலாம் என தெரியவந்துள்ளது.

வாயுமண்டலத்தில் உள்ள மாசுக்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் சாதகமான தள்ளுக்காற்றின் உதவியால் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியின் மேற்புறத்தில் கிழக்குதிசையை நோக்கி பறக்கும் விமானங்களின் வேகம் அதிகரிக்கும். அதேவேளையில், எதிர்க்காற்றின் தடுப்பால் மேற்கு நோக்கி பறக்கும் விமானங்களின் வேகம் குறையக்கூடும்.

குறிப்பாக, லண்டனில் இருந்து நியூயார்க் நோக்கி செல்லும் விமானங்களின் வேகம் வெகுவாக குறையும். இந்த பாதிப்பானது விமான நிறுவனங்கள், பயணிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்காற்றை சமாளித்து பறக்க வேண்டியுள்ளதால் லண்டனில் இருந்து நியூயார்க் நோக்கி செல்லும் விமானங்களின் பயண நேரம் அதிகரிக்கும். பலமாக தாக்கும் எதிர்க்காற்றை போராடி முன்னேறி செல்ல வேண்டியுள்ளதால் ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு விமானமும் சுமார் இரண்டாயிரம் மணிநேரம் கூடுதலாக பறக்க வேண்டிவரும். தற்போது எதிர்கொள்ளும் காற்றின் வேகம் மணிக்கு 77 கிலோமீட்டராக உள்ளது. இனி, குளிர்காலங்களில் 89 கிலோமீட்டர் காற்றை எதிர்கொண்டு பறக்க வேண்டியிருக்கும். இதனால், பயணநேரம் அதிகரிக்கும், விமானங்கள் வந்துசேரும் நேரமும் தாமதப்படும்.

அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து செல்லும் விமானங்கள் கூடுதலாக 22 மில்லியன் டாலர்கள் அளவிலான எரிபொருளை பயன்படுத்த வேண்டிவரும்.

இதன்மூலம், விண்வெளியின் வளிமண்டலத்தில் 70 மில்லியன் கிலோ அளவுக்கு கூடுதலாக கரியமில வாயு சேருவதோடு, எரிபொருள் செலவை ஈடுகட்ட விமானங்களின் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படலாம் என இங்கிலாந்தை சேர்ந்த புவியியல் ஆய்வுக்குழுவின் தலைவரான பால் வில்லியம்ஸ் சமீபத்தில் சமர்ப்பித்துள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply