குமார் குணரத்னத்துக்கு மீண்டும் விளக்கமறியல்

gumar gunaratnamகுடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டிற்குள் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முற்போக்கு கட்சியின் உறுப்பினர் குமார் குணரத்னத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை மஜிஸ்ட்ரேட் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி கேகாலை, அங்குருவல்லை பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னர் இவர் 6 தடவைகள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார். இவர் 103 நாட்கள் இதுவரையில் சிறையில் கழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply