இடைக்கால பட்ஜெட்: 2.42 லட்சம் கோடிக்கு முதலீடுகள் கிடைத்துள்ளது

TAMILNADUதகவல் தொழில் நுட்பவியல் துறையில் அதிமுக தலைமையிலான இந்த அரசின் முன் முயற்சிகள் தேசிய அளவில் பாராட்டப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில், இருமுறை ‘வெப் ரத்னா’ விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது. தகவல் தொழில் நுட்பவியல் துறைக்காக 2016–2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு–செலவு திட்ட மதிப்பீடுகளில் 135.29 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

முதல்–அமைச்சரின் சீரிய தலைமையின் கீழ், 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 9 முதல் 10 ஆம் நாட்களில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்த அரசு வெற்றிகரமாக நடத்தியது. தொழிற்பூங்காக்கள், சாலைக்கட்டமைப்பு, மின் விநியோகம், தொழில் முதலீடுகளுக்கு உகந்த சூழல், திறன் மிக்க மனிதவள ஆதாரம், சிறந்த ஊக்கத்தொகை திட்டங்கள் உட்பட, நமது மாநிலத்தின் உலகத் தரத்திலான கட்டமைப்பு வசதிகளை பறைசாற்ற இந்த முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெரிதும் உதவியுள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் 4.70 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply