தி.மு.க.வை விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளது: மு.க.அழகிரி கருத்து
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.அதன் பின்னரும் தி.மு.க.வை பற்றி அழகிரி தொடர்ந்து விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருக்கிறார். தேர்தல் நேரத்தில் எடுக்கப்போகும் முடிவு குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி அமைந்தது குறித்தும் மு.க.அழகிரி வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் கொள்கையே கிடையாது. எந்தக் கூட்டணியாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்றும், மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் நகைச்சுவையானது என்றும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க.வுக்கும் மு.க.அழகிரிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவரது பேச்சுக்களை தி.மு.க.வினர் அலட்சியப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், தனது முகநூல் பக்கத்தில் மு.க.அழகிரி கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
தி.மு.க. பற்றி கருத்து சொல்ல நீ யார்? என்றும் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாகவே உழைத்துள்ளேன். பல முறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்திருந்தால் அது கட்சிக்காக செய்த தவறாகவே இருக்கும்.
இது போன்று செயல்பட்டுத்தான் கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும், இருந்துள்ளேன். எனவே கட்சியை பற்றி கவலைப்படவும், கட்சி தவறாக செல்லும்போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு மு.க.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply