தவறான செய்திகளை பரப்பாதீர்கள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்:ரஞ்சித் குணசேகர
யால சரணாலய பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். யால பாதுகாப்பற்ற பகுதியாக உள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை முழுமையாக நிராகரித்த அவர் அப்பகுதி கிராமங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதே வேளை, கடந்த சில தினங்களில் புலி உறுப்பினர்கள் யால சரணாலய பகுதிகளில் தாக்குதல் நடத்தியதை அடுத்து அப்பகுதியின் பாதுகாப்பு முழுமையாக பலப் படுத்தப்பட்டுள்ளதாகவும் புலிகள் தாக்குதல் நடத்துவர் என அஞ்சத் தேவையில்லை எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வடக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை வெற்றி கரமாக முன்னெடுத்துவரும் அரசாங்கம் நாட்டின் பாது காப்பு தொடர்பில் அதிக கரிசனை காட்டி வருவதாகவும் யால பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஊடக நிலையம் கூறியது.
யால பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதாக தவறான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஊடக மத்திய நிலையம் கோரியுள்ளது. யால சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தொடர்ந்து தேடுதல் நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply