அவசரநிலை பிரகடனத்தை மே 26 வரை நீட்டிக்க பிரான்ஸ் பாராளுமன்றம் அனுமதி

franceபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 இடங்களில் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 125-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.இதனையடுத்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. பின்னர் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அவசரநிலை பிரகடனம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த அவசரநிலை பிரகடனத்திற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான வாக்கெடுப்பு (தேசிய சபை) பாராளுமன்றத்தின் கீழ் சபையில் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு நடைபெற்றது. இதில் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்படுவதற்கு ஆதரவாக 212 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 31 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.

இதனையடுத்து பிரான்சில் அவசரநிலை பிரகடனம் மே 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply