விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய வாலிபரை காப்பாற்றிய மம்தா பானர்ஜி

mamthaசாலை விபத்தில் சிக்கி, காயமடைந்து, உயிருக்குப் போராடிய வாலிபரை மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உரிய நேரத்தில் உதவிசெய்து காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது.நேற்று பிற்பகல் 2 மணியளவில் கொல்கத்தா நகரில் உள்ள ராணி ரஷ்மோனி நிழற்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பிரசன்ஜித் குன்டூ(28) என்பவர்மீது வேகமாக வந்த டாக்சி மோதியதில் தூக்கி எறியப்பட்ட அவர், ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி காரில் சென்று கொண்டிருந்தார். வாலிபர் குன்டூவின் நிலையை காரில் இருந்தவாறே பார்த்துவிட்ட மம்தா, உடனடியாக டிரைவரிடம் கூறி காரை நிறுத்தச் சொன்னார். காரில் இருந்து கீழே இறங்கிய அவர், தன்னுடன் பாதுகாப்புக்காக வந்த மற்றொரு காரில் குன்டூவை ஏற்றி அருகாமையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குன்டூ, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply