சிங்கள தலைவர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் :ஜயம்பதி விக்ரமரட்ன

IYAMPATHIஅன்று நாம் தமிழர் தரப்புடன் இணக்கப்பாட்டுடன் பயணித்திருந்தால் இன்று இத்தனை இழப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆகவே, அதற்கு தெற்கின் சிங்கள தலைவர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார்.அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் காலத்தை கடத்துவது எந்த வகையிலும் நன்மையளிக்காது. முடிந்தவரையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் அமைப்பை உருவாக்கி பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று கொழும்பிலுள்ள விசும்பாயவில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். சகல மக்களினதும் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொண்டுக்க வேண்டும்.

சட்டம், நீதித்துறையின் சுயாதீனத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள் பலப்படுத்தப்பட வேண்டும். நவீனத்துவ போக்கை கவனத்தில் கொண்டும் மக்களின் அடிப்படை பிச்சினையை கவனத்தில் கொண்டும் அமையவுள்ள அரசியலைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply