சிறையில் இருந்து வெளி வரப்போகிறார் பேரறிவாளன்…?
இப்படியே 20 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட சமீபத்தில் சிறுநீரக தொற்று நோய் பிரச்னைக்காக வேலூர் சிறையிலிருந்து வெளியே, சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த பயணத்தில் தான் வெளி உலகை பார்க்க முடிந்தது என பரவசமாக கூறியிருந்தார்.
சமீபத்தில் எழுவர் விடுதலை சம்பந்தமாக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில், ‘மத்திய அரசு விசாரணை செய்த வழக்கு என்பதால் மாநில அரசு மட்டும் விடுதலை குறித்து முடிவெடுத்து விடமுடியாது’ என கூறப்பட்டிருப்பது சிக்கலை உண்டாக்கியுள்ளது. மீண்டும் சட்டப் போராட்டமும் மாணவர்கள் போராட்டமும் எழுவர் விடுதலைக்காக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில்தான் பேரறிவாளன் பரோலுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதுகுறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். ” வந்தால் விடுதலையாகிதான் வெளியே வருவேன் என 25 வருடமா பிடிவாதமாக பரோல் செய்ய மறுத்து வந்தான். நாங்களும் விடுதலை இந்த ஆண்டு கிடைத்துவிடும், இப்போது கிடைக்கும், அப்போது கிடைக்கும் என பார்த்து பார்த்து பல ஆண்டுகள் கடந்துடுச்சு. அவனோட அப்பா, அறிவு இந்த வீட்டுக்கு எப்ப வருவான்னு காத்துக்கிட்டு இருக்கார். அதை நினைச்சியே மன அழுத்தம் அதிகமாகி உடல் நிலை மோசமாகிடுச்சி அவருக்கு.
அதனால் நாங்கதான் கட்டாயப்படுத்தி பரோலுக்கு விண்ணப்பிக்க வச்சோம். இவ்வளவு வருஷம் உறுதியா இருந்தான். அதை கெடுத்துட்டோமேன்னு வருத்தமாவும் இருக்கு. அவனை வீட்டுக்கு கூட்டி வந்து பார்க்கனும்னு ஒரு தாயா விருப்பமாவும் இருக்கு” என்றார் சன்னமான குரலில்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply