கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலை அமைப்பதை தடுக்க வேண்டும்: உதயகுமார் பேட்டி
பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் உதயகுமார் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைக்க நாங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இருந்தபோதிலும் எங்களுடைய எதிர்ப்பை மீறி அங்கு அணுமின்நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவைகள் அடிக்கடி பழுதாகி வருகின்றன.
இந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் 3 மற்றும் 4-வது அணுஉலை அமைக்க பூமிபூஜை போடப் பட்டு உள்ளது. இது தேசவிரோத செயல் ஆகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் சந்திப்பின்போதுகூட அதிகாரிகள் புதிய அணுஉலை அமைப்பது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் கூடுதல் அணுஉலை அமைத்தால் சுற்றி உள்ள கிராம மக்களுக்கு பேராபத்து ஏற்படும். எனவே அந்த அணுஉலை அமைக்கப்படுவதை தொடக்கத்தில் இருந்தே தடுக்க வேண்டும். அணுஉலை அமைத்த பின்னர் அதற்கு எதிராக போராட்டம் நடத்தினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
எனவே கூடுதல் அணுஉலை அமைக்கும் பணி தொடங்குவதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் சேர்ந்து, அணுஉலைக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராடினால் மட்டுமே அணுஉலை அமைப்பதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply