சர்வகட்சிக் கூட்டங்களில் கூட தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்படுவதில்லை :அமைச்சர் கருணா அம்மான்

கிழக்கின் அபிவிருத்திக்கு நிதி வசதி இல்லையென்பது அப்பட்டமான பொய்யாகும். அதுபோன்று உதவிகள் வழங்கப்படுவதில்லையென்று கூறுவதும் தவறானது. வெளிநாட்டு உதவிகள் கூட கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் அவை பயன்படுத்தப்படவில்லையென்பதே உண்மை. கிழக்கு மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட செலவு செய்யப்படவில்லை. சமுர்த்தித் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் நான்கு கோடி ரூபா செலவு செய்யப்படாத நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டமைப்பு, இன ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் வாழும் தமிழ் சமூகம் தேசிய அந்தஸ்துள்ளவர்களாக மாறவேண்டும். தமிழ் மக்களிடையேயும் பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவை அனைத்தும் தனித்தனியான கொள்கையின் கீழ் செயற்படுகின்றன. சர்வகட்சிக் கூட்டத்தில் கூட தமிழ்க் கட்சிகள் தமது ஒற்றுமையை வெளிக்காட்டுவதில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். அவர் தற்போது தமிழ் கற்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் இப்போது பொலிஸ் அதிகாரம் கேட்கிறார். அவ்வாறானதொரு அதிகாரம் வழங்கப்படும் பட்சத்தில் அது சிங்கள மக்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும். இப்போது எமக்குத் தேவை அமைதியும் அபிவிருத்தியுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply