ஜனாதிபதி ஒஸ்ட்ரியா சென்றடைந்தார்

maithri-4மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஒஸ்ட்ரியா சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (18) ஒஸ்ட்ரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.ஒஸ்ட்ரியா நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் ஐரோப்பாவுக்கான சமஷ்டி அமைச்சின் பிரதம மரபுச்சீர்முறை அதிகாரியுமான கலாநிதி பெட்டினா கேர்ன்பவர் (Dr. Bettina Kirnbauer) விமான நிலையத்தில் ஜனாதிபதியை வரவேற்றனர். விமானநிலையத்திலிருந்து வியன்னாவிலுள்ள கெப்பின்ஸ்கி (Kepmpinski) ஹோட்டலைச் சென்றடைந்த ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினரை ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி பிரியானி விஜேசேகரவும் தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒஸ்ட்ரியாவின் சமஷ்டி ஜனாதிபதி ஹீன்ஸ் பிஷர் அவர்களை (Heinz Fischer) ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

அதன் பின்னர் ஒஸ்ரியாவின் வர்த்தக சங்கத்திற்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளதுடன், அங்குள்ள இலங்கை சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியின் ஒஸ்ரியாவுக்கான இவ்விஜயமானது இரண்டு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளைப் மேலும் பலப்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply