ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பினார்

maithiஜேர்மன் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபுர்வ விஜயங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.அரச தலைவர் ஒருவருக்கு ஐரோப்பாவில் வழங்கப்படும் உயர்ந்த பட்ச கௌரவத்தை அவர் பெற்றுக் கொண்டுள்ளார். அத்துடன், இந்நாடுகளுக்கு இலங்கை தொடர்பான சிறந்த மனப்பதிவுகளை வழங்க இந்த விஜயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்ஷகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த இரு நாடுகளின் தலைவர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார். அத்துடன், இலங்கைக்கு உதவுவதற்கு அரச தலைவர்கள் பலர் உறுதியளித்துள்ளதுடன், பல உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply