மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் முரளிதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் பங்கேற்பு
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டமும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமும் நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன. இக் கூட்டங்களை முன்னிட்டு மட்டக்களப்பு நகரிலும் மாவட்ட செயலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மாவட்ட செயலகத்தினுள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட செயலகத்துக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் வெபர் விளையாட்டு மைதானத்திலும் வாடி வீட்டுக்கு முன்னாலுமே தரித்து வைக்க அனுமதிக்கப்பட்டன. செயலக மாநாட்டு மண்டபத்தினுள் கையடக்க தொலைபேசி கொண்டு செல்லவும் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
இக் கூட்டங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜயவிக்கிரம, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, இன ஒருமைப்பாட்டு அமைச்சர் வினõயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன், பிரதி மேயர் ஏ. ஜோர்ஜ் பிள்ளை, பிரதேச சபை தலைவர்கள், அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன், பிரதி பொலிஸ்மா அதிபர் எட்வின் குணதிலக, பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், கிழக்கு மாகாண உள்ளூராட்சி புனர்வாழ்வு, மீள் குடியேற்ற அøமைச்சின் செயலாளர் எஸ். மாமாங்கராசா ஆகியோர் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். முதலில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது. அடுத்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படும் வேலைகளின் முன்னேற்றம், அவை எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் குறைகள், தேவைகள் ஆராயப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply