புதிய அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றது: மஹிந்த
புதிய அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்தனகல்ல சப்புகஸ்கந்தவில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சினால் எல்லோரும் ஒன்றிணைந்து அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிட முடியும்.எனது ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் உரிய தேர்தல்களை நடாத்தியிருந்தேன். வடக்கு கிழக்கு மாகாணங்களில் கூட உரிய நேரத்தில் தேர்தல் நடத்தியிருந்தேன்.
எனினும் இந்த அரசாங்கம் அவ்வாறு தேர்தலை எதிர்நோக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. அபிவிருத்தித் திட்டங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.மக்களிடம் இப்போது பணமில்லை. நாம் நாட்டை அபிவிருத்தி செய்தோம். எதற்காக பெருந்தெருக்கள் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply