40,000 டாலர் செலவில் கழிப்பறை கட்டி, பயன்படுத்தாத இளவரசி !
கம்போடியாவுக்கு வருகை தந்த தாய்லாந்து இளவரசிக்காகக் கட்டப்பட்ட பிரத்யேக 40,000 டாலர் செலவில் கட்டப்பட்ட கழிப்பறையை அவர் ஒரு முறைகூட பயன்படுத்தவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிண்ஹான், யீக் லோம் ஏரிக்கு இரண்டு மணி நேரம் வந்திருந்தபோது, இந்தக் கட்டிடத்தைப் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டார், ஆனால் அந்தக் கழிப்பறையைப் பயன்படுத்தவே இல்லை. இந்தக் கழிப்பறை இளவரசியின் பயன்பாட்டுக்கு மட்டுமே கட்டப்பட்டதால் இப்போது அகற்றப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்தக் கழிப்பறையைக் கட்ட தாய்லாந்து அரச குடும்பம் பணம் தந்தது என்று கம்போடிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் மேலானோருக்கு கழிப்பறை வசதி இல்லாத கம்போடியாவில் இந்தச் செய்தி பரவலாக கவனிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply