பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

pillaiyanகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திரமணி சிவபாதசுந்தரம் இன்று உத்தரவிட்டார்.

இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply