கூட்டமைப்பிடம் தரமான திட்ட வரைவு சபையில் அறிவித்தார் செல்வம் எம்.பி.
நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு காண்பதற்கான தரமான வரைவு தயாராகவுள்ளது. தற்போது அதனை வெளிப்படுத்தினால் கடும் போக்காளர்கள் தவறாக பயன்படுத்தி இலாபம் அடைந்து விடுவார்கள்.என்பதற்காகவே இரகசியம் காக்கப்படுவதோடு இராஜதந்திரமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவையாக பாராளுமன்றம் மாற்றியமைப்பது குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply