நியூஸிலாந்துடன் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
பொதுநலவாய நாடுகளான இலங்கை மற்றும் நியூஸிலாந்துக்கு இடையில் நீண்ட கால தொடர்பு மற்றும் சக்தி மிக்க இணைப்பு காணப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இன்று ஜனாதிபதி செயலகத்தில் நியூஸிலாந்துப் பிரதமரை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.
விஷேடமாக நியூஸிலாந்து விவசாய நாடாக புதிய தொழிநுட்ப உத்திகளுடன் முன்னோக்கி செல்வதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பால் தொழிற்துறைக்கு அந்த தொழிநுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான, பயிற்சி வேலைத் திட்டங்களை செயற்படுத்துவது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பொருளாதார, வர்த்தக மற்றும் தொழிநுட்ப அறிவு பறிமாற்றம் உள்ளிட்ட சில ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply