தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு சிறைக்கு திரும்பினார் நளினி

nalini முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது தந்தை சங்கரநாராயணன் (வயது 92), நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகில் உள்ள அம்பலவாணபுரத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

 

அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று 12 மணி நேரம் பரோலில் செல்வதற்கு நளினிக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நளினியை கோட்டூர்புரம் அழைத்து வந்தனர். அவர் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

இதனை அடுத்து சுமார் 3.30 மணியளவில் கோட்டூர்புரத்தில் இருந்து வேலூருக்கு கிளம்பினார். மாலை 6.45 அளவில் வேலூர் சென்று அடைந்தார். பின்னர் அவருக்கான சிறையறையில் அடைக்கப்பட்டார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply