தனது கோரிக்கைகளில் இருந்து சம்பந்தன் பின்வாங்குகிறார் : ஸ்ரீதரன்
தனிநாட்டு கோரிக்கையில் உறுதியாக இருந்த சம்பந்தன் அவர்கள் இன்று சுயாட்சி கோரிக்கையையும் கைவிட்டு தீர்வுக்காக காத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். தனிநாட்டு கோரிக்கையில் உறுதியாக இருந்த சம்பந்தன் அவர்கள் இன்று சுயாட்சி கோரிக்கையையும் கைவிட்டு, ஐக்கிய இலங்கைக்குள் பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வொன்றை காண்பதற்கான நல்லெண்ண சமிக்கையை தொடர்ச்சியாக வெளிக்காட்டி வருவதோடு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்ப்பட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய ஆதரவு இன்று அவரை இந்த நாட்டின் தலைவராக்கியது.
வீழ்ந்து கிடந்த இலங்கையின் செல்வாக்கை உலகளாவிய ரீதியில் உயர்த்தியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒருங்கிணைந்து அரசாங்கம் உருவாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply