திருச்சியில் அடுத்த மாதம் 20–ந்தேதி கருணாநிதி–ராகுல்காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சி
திருச்சியில் அடுத்த மாதம் (மார்ச்) 20–ந்தேதி திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்து வருகிறார்.தேர்தல் நேரத்தில் நடைபெறுவதால் இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பீகார் முதல்–மந்திரி நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.நிதீஷ்குமார், லல்லு ஆகியோர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் தி.மு.க.வும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் ராகுல் காந்தியையும் மாநாட்டில் பங்கேற்க செய்வதில் திராவிடர் கழகம் ஆர்வமாக உள்ளது.இது தொடர்பாக ஏற்கனவே ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இன்று இளங்கோவனும் நேரில் அழைத்துள்ளார்.தேர்தல் நேரத்தில் ஒரே மேடையில் அனைத்து தலைவர்களும் பங்கேற்பது தேர்தல் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் என்று கருதுகிறார்கள்.ஏற்கனவே தலித்துகள் பிரச்சனை, மாணவர்கள் பிரச்சனைகளில் நேரடியாக பங்கு பெற்று வருவதால் சமூகநீதி மாநாடு என்பதால் இதில் பங்கேற்பதிலும் ராகுல்காந்தி இசைவு தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.பீகாரில் நிதீஷ்குமார், லல்லு, ராகுல் ஒன்றாக கைகோர்த்து சாதித்தது.
அதே போல் தமிழக தேர்தலிலும் கருணாநிதியுடன் அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் அணிவகுப்பதால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply