போர்க்குற்ற விசாணையில் சர்வதேச தலையீட்டுக்கு இடமளியோம்! : சம்பிக்க ரணவக்க
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் சர்வதேசத்தின் தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ள நிலையிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இரு தரப்பிலும் இழப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களும்,
சிங்கள் மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் சர்வதேசம் குற்றம் சுமத்தும் அளவுக்கு எந்தவித மனித உரிமை மீறல்களும் இறுதி யுத்தத்தின் போது இடம்பெறவில்லை.
மனிதாபிமான நடவடிக்கைகளே எமது இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டன.
அவ்வாறான நிலையில் எமது இராணுவத்தை போர்க் குற்றவாளிகள் என அடையாளப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply