டெல்லியில் வழி தவறி சென்ற ஜெர்மன் இளம் பெண் ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு

a697079b-10fb-461f-8555-4ca710abf155_S_secvpfஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் மராட்டியத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் 2 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது ஆண் நண்பருடன் டெல்லி வந்தார். படேல் நகரில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று இரவு ஜெர்மன் இளம் பெண் படேல் நகர் பகுதியில் தனியாக நடந்து சென்றார். அப்போது அவர் வழி தவறி திசை மாறிச் சென்று விட்டார்.அப்போது அந்தப் பக்கமாக ஒரு ஆட்டோ வந்தது. அதை நிறுத்தி டிரைவரிடம் வழி கேட்டார். அவர் பெண்ணுக்கு வழி காட்டுவது போல் ஏமாற்றி ஆட்டோவில் கடத்திச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவர் ஜெர்மன் பெண்ணை மிரட்டி கற்பழித்து விட்டார்.அதன் பிறகு ஆட்டோ டிரைவரிடம் இருந்து தப்பிய ஜெர்மன் பெண் ஓட்டலுக்கு நடந்தே வந்தார். 

 

ஆனால் நடந்த சம்பவத்தை அந்தப் பெண் யாரிடமும் தெரிவிக்கவில்லை. போலீசிலும் புகார் செய்யவில்லை. சில நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி மகளிர் ஆணையத்துக்கு இ–மெயில் மூலம் நடந்த சம்பவம் பற்றி தகவல் அனுப்பினார்.அதன் பேரில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாமி மாலிவால் டெல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து டிரைவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். சந்தேகப்படும் நபர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply