லசந்த படுகொலை தொடர்பில் 40 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் தீவிர விசாரணை!
சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நாற்பது பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இவர்களுள் கேர்ணல், மேஜர், கப்டன், சார்ஜண்ட், கோப்ரல் மற்றும் சாதாரண சிப்பாய்கள் உட்பட பல்வேறு தரப்பினர் உள்ளடங்குகின்றனர் என்றும், அவர்கள் அனைவரும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பணிபுரிபவர்கள் எனவும் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லசந்தவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையிலேயே மேற்கூறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருகின்றன எனவும், இவர்களிடமிருந்து கிடைத்த மிக முக்கிய தகவல்களின் அடிப்படையில் முன்னாள் இராணுவப் பிரதானியொருவரிடமும் சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் படுகொலையின் பிரதான சூத்திரதாரி விரைவில் கைதாவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply