பயங்கரவாதம் பொருளாதார வளர்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது: சுஷ்மா சுவராஜ் கருத்து
கருத்துக்கள் மூலமாக பரவி வரும் பயங்கரவாதமும், வன்முறையும், அதேபோல் பிராந்தியங்களுக்கு இடையிலான மோதலும் தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் புவிசார் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று நடந்தது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கினை நேற்று சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார். இணைப்பில் ஏற்படுகின்ற இடையூறு குறித்து பேசிய சுஷ்மா, தகவல் தொழில்நுட்பத்தினால் ஏற்படும் சைபர் தாக்குதல் குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்து விளக்கினார்.
மேலும் பிராந்தியங்களுக்கு இடையிலான சிக்கல்கள் அந்த நாட்டின் அழுத்தத்தால் உருவாக்கப்படுவது கவலை தருவதாக தெரிவித்தார். இந்த உரையின் போது சுஷ்மா சுவராஜ் எந்தவொரு நாட்டினையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்ஜை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply