உலகின் பணக்காரர்களில் பில் கேட்ஸ் தொடர்ந்து முதலிடம், முகேஷ் அம்பானி 36-வது இடம்: போர்ப்ஸ்
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 17-வது முறையாக மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்தார் பில் கேட்ஸ். இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி 36-வது இடத்தைப் பிடித்துள்ளார்.உலக அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை பிரபல அமெரிக்க வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துவந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் அதே இடத்தில் நீடிக்கிறார்.
கடந்த 21 ஆண்டுகளாக பணக்காரர்களை பட்டியலிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 17-வது முறையாக முதல் இடத்தை பில் கேட்ஸ் தக்கவைத்துள்ளார்.
இந்த பட்டியலில் ஆயிரத்து 810 பேர் இடம்பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு வெளியிட்ட பட்டியில் ஆயிரத்து 826 பேர் இடம்பெற்றிருந்தனர்.
பில்கேட்ஸ்-ன் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 75 பில்லியன் டாலராக உள்ளது. இது சென்ற ஆண்டை விட 4.2 பில்லியன் டாலர் குறைவு தான். ஃபோர்ப்ஸ் வெளியிடும் பில்லியனர்ஸ் பட்டியலில் கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 20.6 பில்லியன் டாலர் ஆகும்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 84 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். மொத்த பட்டியலில் 36-வது இடத்தில் உள்ளார்.
பில் கேட்ஸை தொடர்ந்து 2-வது இடத்தில் ஸ்பானிஷ் பில்லியனர் அமன்சியோ ஒர்டிகா உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply